Fri. Jul 31st, 2026

முனைவர் ஜெ.யு. சந்திரகலா அவர்கள், இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை மையம் குடோனில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்கு பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் (VVPAT) வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையை (26.05.2026) அன்று மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, வைப்பறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக உள்ளனவா, கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுகிறதா, இரட்டை பூட்டு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பன குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதையும் மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு உறுதி செய்தார்.இந்த ஆய்வு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், மாதந்தோறும் இத்தகைய ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆய்வின்போது செல்வி வசந்தி உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர்

கோபி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed