Sat. Jun 13th, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.76 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர் ஜெ.யு. சந்திரகலா அவர்கள், (25.05.2026) அன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2.76 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இதில் செயற்கை அவயம், காலிப்பர், கம்மோட் சக்கர நாற்காலி, சிறப்பு நாற்காலி, ஊன்றுகோல் உள்ளிட்ட அத்தியாவசிய உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.இந்த உதவிகள் மாற்றுத்திறனாளிகள் தங்களது அன்றாட வாழ்க்கையை சுயமாகவும் எளிதாகவும் மேற்கொள்ள உதவும் வகையில் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். அரசு திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு தாமதமின்றி சென்றடைய அதிகாரிகள் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் திருமதி செந்தில்குமாரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர்

கோபி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *