Wed. Jul 29th, 2026

ஜூலை 10:

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம் சரக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 233.106 கிலோ கஞ்சா நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது.

விழுப்புரம் சரக காவல்துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கை, போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக காவல்துறையின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் தகவலின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 90 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 38.013 கிலோ கஞ்சா, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 88 வழக்குகளில் 34.516 கிலோ கஞ்சா, கடலூர் மாவட்டத்தில் 35 வழக்குகளில் 160.577 கிலோ கஞ்சா என மொத்தம் 213 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 233.106 கிலோ கஞ்சா நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு அழிக்கப்பட்டது.

சிறப்பு குழு மேற்பார்வையில் பாதுகாப்பான அழிப்புஇந்த நடவடிக்கை, விழுப்புரம் சரக காவல் துணைத் தலைவர் அருளரசு தலைமையில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த் சுக்லா, மொபைல் தடய அறிவியல் ஆய்வக (பொறுப்பு) உதவி இயக்குநர் ராஜீவ், துணைக் காவல் கண்காணிப்பாளர் கந்தசாமி, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் அறிவழகி உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய சரக அளவிலான போதைப்பொருள் அழிப்பு குழுவினர் கலந்து கொண்டு முழு நடவடிக்கையையும் கண்காணித்தனர்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கத்தில் அமைந்துள்ள M/s. G.J. Multiclave India Pvt. Ltd. நிறுவனத்தில், அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி, அதிகாரிகள் முன்னிலையில் ஜூலை 1ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா முழுமையாக அழிக்கப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பில் தொடரும் நடவடிக்கைகள்போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக எந்தவித சமரசமும் இன்றி சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என விழுப்புரம் சரக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் விற்பனை அல்லது கடத்தல் தொடர்பான தகவல்கள் கிடைத்தால், பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இதுபோன்ற பறிமுதல் மற்றும் அழிப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடரும் என விழுப்புரம் சரக காவல்துறை உறுதியளித்துள்ளது.

ஆசிரியர்.

D. ராஜீவ் காந்தி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed