


பாலக்கோடு அடுத்த கடத்திக்கொள்ளுமேடு கிராமத்தில் மாரியம்மன் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் சுவாமிக்கு 21ம் நாள் மண்டல பூஜை திரளான பக்தர்கள் சுவாமி வழிபாடு.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள கடத்திக்கொள்ளுமேடு கிராமத்தில் பழமை வாய்ந்த மகாமாரியம்மன் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் சுவாமி மற்றும் கோயில் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 19ம் தேதி வெகு விமர்சையாக நடந்தது.
அதனை தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடந்து வருகிறது.

நேற்று 21ம் நாள் மண்டல பூஜையை முன்னிட்டு கோயிலில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு, அக்னி ஆராதனை செய்யப்பட்டு கும்ப பிரதிஷ்டை செய்து திருமஞ்சனம், அபிஷேகம், யாகசாலை ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
இதனையடுத்து கலசபுனித நீரை சுவாமிக்கு ஊற்றி சிறப்பு பூனஜகள் செய்து மகா தீபாரதனை காட்டினர்.
மகாமாரியம்மன் மற்றும் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இந்த விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
பாலக்கோடு சிறப்பு செய்தியாளர்.
வேலு
