Wed. Jul 29th, 2026

பாலக்கோட்டில் அரசு மதுபான கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – இதனை பயன்படுத்தி தனியார்மனமகிழ் மன்றம் மதுபான கடையில் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் 10க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது பாட்டிலுக்கு பத்து ரூபாய் குடிமகன் மத்தியில் பிரச்சனை எழுவதாகவும் டாஸ்மார்க் கடை ஊழியர்களுக்கு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவதால் மேலும் 25 சதவீத விழுக்காடு சம்பளத்தில் உயர்த்தியும் அறிவித்த நிலையில் எங்களுக்கு செலவுகளை ஈடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து மதுபானகடையை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார் மதுக்கடையில் அரசு மதுபான கடையை விட பாட்டிலிருக்கு 20ரூபாய் முதல் 30ரூபாய் வரை கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கள்ள சந்தையில் விற்பதுக்காக மொத்தமாக பாட்டில்களை வாங்கி செல்கின்றன. மது பிரியர்கள் 1-மணி நேரத்துக்கு மேல் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மதுக்களை வாங்கி சென்றனர்.

மேலும் அரசு மதுபான கடையில் வாங்கப்படும் பாட்டில்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி 10ரூபாய்க்கு பாட்டிகல் திரும்ப பெறப்படுகின்றது. ஆனால் தனியார் மது கடையால் பாட்டிகள் திரும்ப பெறபடுவதில்லை இதனால் ஆங்காங்கே மது பாட்டில்களை வீசி சென்று வருகின்றனர்.தமிழக அரசு மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்த்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாலக்கோடு சிறப்பு செய்தியாளர்.

வேலு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed