
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா, அவர்கள் இன்று (5.6.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாத்தில் காலியாக உள்ள இடத்தில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து 250 மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சி.பேபி இந்திரா, திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை திரு.கு.செல்வராசு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் திரு.தொல்காப்பியன், மகளிர் திட்ட இயக்குனர் திரு.செந்தில் குமரன், நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.கீதாலட்சுமி, தோட்டக்கலை துணை இயக்குனர் திருமதி.சிந்தியா, இராணிப்பேட்டை கோரமண்டல் பெர்டிலைசர் நிறுவன துணைத் தலைவர் திரு.உமாபதி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர்.
கோபி
