
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் உள்வட்டம், ஈராளச்சேரி கிராமம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஷூ கம்பெனி வேன் கட்டுப்பாட்டை இழந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார்கள் மீது மோதியதில் வேன் மற்றும் காரில் பயணம் செய்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ யு சந்திரகலா இஆப அவர்கள் இன்று இரவு மருத்துவமனையில் பார்வையிட்டு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்கள் தொடர்ந்து மேல் சிகிச்சைகளுக்காக தனியார் மருத்துவமனை மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளவர்கள் நிலைமை குறித்தும் கேட்டறிந்தார்கள். மேலும் இவ்விபத்தில் மூன்று நபர்கள் உயிரிழந்தவர்கள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார்கள். வாலாஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கிட மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் உஷா நந்தினி அவர்களிடம கேட்டுக் கொண்டார்கள்.
ராணிப்பேட்டை செய்தியாளர்
கோபி
