Sat. Jun 13th, 2026

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த 12 ஆண்டுகள் இந்திய அரசியலின் சாதாரண காலகட்டமல்ல உலக அரங்கில் பாரதத்தின் பெருமையை உயர்த்திய பொற்காலமாகும். கடந்த 12 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் உலக நாடுகள் கவனிக்கும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதுதூத்துக்குடி ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்டு நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது அதேபோல், தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது இதனுடன், கப்பல் கட்டும் தளம் அமைக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவுட்டர் ஹார்பர் திட்டமும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது தூத்துக்குடி மாவட்டத்திற்கு தொழில், போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பெரும்பாலான உள்கட்டமைப்பு வசதிகளையும் ஒரே காலகட்டத்தில் கொண்டு வந்தது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மட்டுமே மேலும் இந்தியாவை உலகின் முன்னணி நாடுகளுள் ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு பிரதமர் மோடி அவர்கள் ஓய்வு இல்லாமல் செயல்பட்டு வருகிறார்.நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இல்லாத ஆட்சியை அவர் வழங்கி வருகிறார். எல்லைத் தாக்குதல்களுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு, உரி தாக்குதலுக்கு பின் சர்ஜிக்கல் ஸ்டிரைக், புல்வாமா தாக்குதலுக்கு பின் பாலகோட் விமானத் தாக்குதல் போன்ற துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் இந்தியா மீது கை வைக்க நினைக்கும் சக்திகளுக்கு தக்க பதில் அளிக்கப்பட்டது.காஷ்மீரில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டு, ஒரே நாடு – ஒரே அரசியலமைப்பு என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் தேசிய ஒருமைப்பாடு மேலும் வலுவடைந்தது.அதேபோல், உலக நாடுகளுடன் இந்தியாவின் உறவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றவர் பிரதமர் மோடி உலக அரங்கில் இந்தியாவின் குரல் இன்று தனித்துவமான மரியாதையை பெற்றுள்ளது.கொரோனா போன்ற உலகளாவிய பேரிடர் காலத்திலும் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்பட்டது. ஏழை மக்களுக்கு இலவச தடுப்பூசி, மருத்துவ கட்டமைப்பு மேம்பாடு போன்ற நடவடிக்கைகள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாக்கப்பட்டது. உலக நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்தியது.ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பிரதமர் ஆவாஸ் யோஜனா, உஜ்வலா திட்டம், ஜல் ஜீவன் மிஷன், ஆயுஷ்மான் பாரத், டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.நாட்டு நலனுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் இந்தியா இன்னும் பல சாதனைகளை படைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும், உலக அரங்கில் பாரதத்தின் பெருமையை உயர்த்துவதற்கும் அவர் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார்.இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் அவரது கனவு விரைவில் நனவாகும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு தேசபக்த இந்தியரின் மனதிலும் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

சுடலைமணி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *