Wed. Jul 29th, 2026

இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட வாசனை ஷாம்பூ மற்றும் ஆட்டோ உடன் ஒரு நபரும் பிடிபட்டார்

.தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர உட்கோட்டம் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இனிகோ நகர் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடப்பதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய் அனிதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர்கள் இருதய ராஜ்குமார் இசக்கிமுத்து காவலர்கள் பழனி பாலமுருகன் பேச்சு ராஜா ஆகியோர் இரவு அலுவல் செய்த போது இனிக்கோ நகர் கடற்கரையின் தெற்கு புறம் உள்ள கடற்கரைப் பகுதியில் இன்று 19.06.2026ம் தேதி அதிகாலை 01.00 மணிக்கு படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக TN 92 F 0959 என்ற பதிவு எண் கொண்ட.

ஆட்டோவில் 8 மூட்டைகளில் வாசனை ஷாம்பு 51அட்டைப் பெட்டிகளில் மொத்தம் 48 960 எண்ணிக்கையும்(சன் சில்க் கிளினிக் பிளஸ்) கைப்பற்றப்பட்டுள்ளதுஆட்டோ ஓட்டுநர்மரிய நிசாந்தன் 32/26S/o அந்தோணி ராஜ்No 03/82 அந்தோணியார் கோவில் தெரு, வெள்ளைப்பட்டிதாளமுத்து நகர்என்பவர் மட்டும் பிடிபட்டுள்ளார் கைப்பற்ற பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 5 லட்சமாகும்

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

சுடலை மணி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed