

தூத்துக்குடியில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் முன்னனி தலைவரும் மற்றும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா (19-6-2026) வெள்ளிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் வெடி வெடித்தும், பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப் பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் சகாயராஜ் மற்றும் ஏராளமான கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
சுடலைமணி
