
இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் “Single Pole Solar Blinkers” தொடக்க விழா* இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு, இன்று (15.05 2026) ஆயுதப்படை தலைமையகம் அருகிலுள்ள சென்னை – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் “Single Pole Solar Blinkers” அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. பே. சிபின், அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும், மாவட்டம் முழுவதும் புதிதாக கண்டறியப்பட்ட சுமார் 51( Accident Hotspot Areas)பகுதிகளில் இந்த அமைப்புகள் நிறுவப்பட உள்ளன.இந்த அமைப்புகள் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை சுடராக செயல்பட்டு, சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும், சாலை பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.உடன் இராணிப்பேட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. கனகராஜ், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர்.
கோபி
