Sat. Jun 13th, 2026

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் வசித்து வரும் சண்முக வடிவு கூறுகையில் எனது கணவர் குருசாமி இறந்து சுமார் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. எனக்கு மூன்று ஆண் மகன்களும் ஒரு பெண் மகளும் உள்ளனர். அதில் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் என் இளைய மகன் ராஜ்குமாரின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தேன். எனது இளைய மகன் ராஜ்குமார் தூத்துக்குடியில் உள்ள கார்ப்பரேஷனில் துப்புரவு பணியாளராக காண்ட்ராக்டில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த 25.02.2026 கழிவுநீர் கால்வாய் சரி பார்க்கும்போது விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இது குறித்து தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள SIPCOT காவல் நிலையம் புகார் செய்து அது FIR NO : 157/2026-ஆக பதிவு செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் பல போராட்டங்களுக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அவர்கள் உத்தரவின் பேரில் இறந்து போன ராஜ்குமார் வாரிசுகளுக்கு காண்ட்ராக்ட் இன்சூரன்ஸ் பணம் சுமார் 30,00,000/-(முப்பது இலட்சம்) பணமும், மனைவிக்கு அரசு வேலையும் மற்றும் இலவச வீட்டு மனைகளும் வழங்குவதாக உத்தரவிடப்பட்டு, அன்று ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. காசோலை ஒருவரின் பெயரில் ஒரே ஒரு செக் தான் வழங்க முடியும் என்பதால் யார் பேரில் வழங்க வேண்டும் என்று முடிவு செய்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதன் பெயரில், எனக்கு கல்வியறிவு இல்லாத காரணத்தினாலும், எனது மகனின் மகன் எனது பேரன் இளவர் என்பதாலும் அன்று ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி, தற்போது எனது மருமகள் பெயரில் காசோலை பெற்றுக் கொள்ளட்டும், பிறகு ஊருக்கு சென்று காரியங்கள் அனைத்தும் முடிந்த பிறகு பணத்தை பிரித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்ததன் அடிப்படையில், அன்று என் மருமகள் பெயரில் ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலை பெற்றுக் கொண்டோம். பின்பு அந்த 30 லட்சத்தில் வாரிசு நிலைமையில் எனக்கு 10 லட்சம் தருவதாகவும், எனது பேரன் பெயரில் 10 லட்சத்தை டெபாசிட் செய்து விடுவதாகவும், எனது மருமகள் கூறியதன் பெயரில் தான் நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் எனது மருமகள் சுபா என்பவரின் பெயரில் காசோலை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்து செய்தேன். அதன் பிறகு எனது மருமகள் என்னுடன் பருத்தி குளத்தில் எனது வீட்டில் தான் ஒன்றாக இருந்து வந்தார். நாங்கள் ஊர் பெரியவர்கள் அனைவரும் வைத்து பேசிய போது பணத்தை எடுத்து தருவதாகவும் கூறினார். இதுகுறித்து பலமுறை எனக்கு தர வேண்டிய தொகையை தருமாறும், பேரனுக்கு டெபாசிட் செய்ய வேண்டிய தொகையை செய்யுமாறும் கூறியதற்கு காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் நான் வேலைக்கு சென்று இருந்த சமயம் பார்த்து எனது பேரனை அழைத்துக் கொண்டு எனது மருமகளான சுபா தன் தந்தை ஊரான பேட்டைக்கு கடந்த 15 தினங்களுக்கு முன் (20-5-2026) சென்று விட்டார்.அலைபேசியில் அழைத்து கேட்டதற்கு வருகிறேன் என்று கூறிவிட்டார். இந்நிலையில் 5.5.2025 ஆம் நாள் அன்று எனது மருமகள் கங்கைகொண்டால் வந்து தனது அக்கவுண்ட் உள்ள வங்கியில் உள்ள பணத்தில் ரூபாய் 25 லட்சத்தை எடுத்து சென்றதை பார்த்ததாக எனது உறவினர்கள் மூலம் தெரிந்து கொண்டு, பின்பு நானும் 6.5.2026-ஆம் நாள் வங்கியில் சென்று கேட்டபோது அவர்கள் எனது மருமகள் எடுத்து சென்று விட்டார் என்ற விபரத்தை எனக்கு தெரிவித்தனர். பின்பு அதைப்பற்றி கேட்க அலைபேசியில் தொடர்பு கொண்டதற்கு போனை எடுக்கவில்லை. எனக்கு எனது மகனின் வாரிசு நிலைமையில் தரவேண்டிய பணத்தை தராமல் என்னை ஏமாற்றி மோசடி குற்றம் புரிந்துள்ளார். எனக்கு கல்வி அறிவும், எந்த ஒரு வாழ்வாதாரமும் இல்லாத சூழ்நிலையில் வயது முதிர்வு நிலையில் இருந்து வருகிறேன். இறந்து போன எனது மகன் ராஜ்குமாரை வைத்து தான் இவ்வளவு காலமும் வாழ்ந்து வந்தேன். இனியும் வாழும் சூழ்நிலையில் உள்ளேன். எனக்கு என்று எந்த ஒரு வாழ்வாதாரமும் இல்லை. இதுகுறித்து கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் 7.5.2026 ஆம் நாளன்று புகார் அளித்தேன். மேற்படி புகார் மனு மீதான விசாரணைக்கு வருமாறு எனது மருமகள் சுபாவை காவல் நிலையத்தில் இருந்து அழைத்தபோது விசாரணைக்கு வருவதற்கு எனது மருமகள் சுபா மறுத்துவிட்டார். நான் கொடுத்த புகார் மனு சம்மந்தமாக எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை.மேற்படி மனுவின் மீதான CSR நகல் இத்துடன் தாக்கல்.ஆகையால் உயர்திரு. மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் எனது மகனின் வாரிசு நிலைமையில் எனக்கு சேர வேண்டிய எனது மகனின் இறப்பிற்கு உண்டான பணத்தில் எனக்கு உண்டான பங்கை தராமல் ஏமாற்றி மோசடி செய்த என் மருமகள் சுபம் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

சுடலை மணி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *