Sat. Jun 13th, 2026

கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி தமிழகத்தில் அரசியல் தலைவராக வலம் வரும் அண்ணாமலையின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.புதுக் கட்சி தொடங்கப் போகிறீர்களா என்று சென்னையில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இன்னும் 2 நாட்களில் எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறேன்” என்று அண்ணாமலை கூறினார்.இந்த நிலையில், ஜூன் 2-ஆம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அண்ணாமலை சந்தித்தது குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அண்ணாமலையின் அரசியல் பயணத்தில் ஏதேனும் மாற்றங்கள் வருமா, அப்படியே தொடருமா என்ற எதிர்பார்ப்புகளும் எழத்துவங்கியுள்ளன.முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பாஜக மாநிலத்தலைவராக மேற்கொண்ட நடவடிக்கைகளால், அக்கட்சி தமிழகத்தில் கவனம் ஈர்த்து வந்த நிலையில், அவர் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆசிரியர்

D. ராஜீவ் காந்தி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *