Wed. Jun 17th, 2026

வேலூர்,ஜூன் 14-

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பல வருடமாக இயங்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு சிவராஜ் நகர் (போன்மில்) பகுதியைச் சேர்ந்த சிவ.வி.கோபி-வித்யா தம்பதியரின் மகளான நர்த்தனா என்ற மாணவி 6ம் வகுப்பு படித்து வருகிறார் .அவர் நெற்றியில் திருநீர் அணிந்து கொண்டு பள்ளி சென்றுள்ளார். அதை பார்த்த அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் லில்லியும், ஆசிரியர் தீபாவும் மாணவி நர்த்தனாவை அழைத்து ஏன் நெற்றியில் திருநீர் அணிந்து வந்தாய் என்று கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

அத்துடன் நிற்காமல் மாணவியிடம் திருநீரை அழித்துக் கொண்டு வா என்று மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை மாணவி.நர்த்தனா. தனது பெற்றோரிடம் கூறினார். மறுதினம் வழக்கம் போல மாணவி நர்த்தனா பள்ளிக்குச் சென்றார். அப்பொழுது பள்ளியில் பிரேயர் கூட்டம் நடந்து கொண்டுள்ளது. அப்போது மாணவி நர்த்தனா. நெற்றியில் இருந்த திருநீரை கவனித்த ஆசிரியை தீபா நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு முன்பு நர்த்தனாவின் பெயரை கூறி அழைத்து உன் நெற்றியில் உள்ள திருநீரை அழித்துக் கொண்டு பள்ளி அறைக்குள் செல் என்று கூறியுள்ளார். இதனால் மிகவும் மனம் வருந்திய மாணவி நர்த்தனா தனது நெற்றியில் இருந்த திருநீரை அழித்து விட்டு பள்ளி அறைக்குள் சென்றுள்ளார். இது குறித்தும் மாணவி.நர்த்தனா தனது பெற்றோரிடம் அழுதவாறு கூறியுள்ளார். இது குறித்து ஆவேசமடைந்த மாணவி நர்த்தனாவின் தந்தை கோபி மேற்கண்ட இரண்டு ஆசிரியர்களிடமும் நேரில் சென்று மாணவிகள் திருநீர் அணிந்து வராமல் வாருங்கள் என்றும் கூறியிருக்கிறீர்களாமே என்று கேட்டுள்ளார்.

அதற்கும் மேற்கண்ட ஆசிரியர்கள் நாங்கள் அப்படித்தான் சொல்லுவோம். உங்களால் ஆனதை பாருங்கள் என்றும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகார் செய்யுங்கள். நீங்கள் எங்கு சென்று புகார் கொடுத்தாலும் நாங்கள் ஒரு கை பார்த்து கொள்கிறோம் என்று திமிராக தெனாவெட்டாக பதில் பேசியுள்ளனர். முதலமைச்சர். விஜய் 1992 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான கிட்டத்தட்ட 2026 ஆம் ஆண்டு வரை பத்திரிகைகளிலும், சினிமாவிலும் தனது பெயரை விஜய் என்றுதான் தெரியப்படுத்தி வந்தார்.

விஜய் முதலமைச்சர் ஆனதுமே தனது பெயரை ஜோசப் விஜய் என்று தெரியப்படுத்தினார். இதை கண்டு தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தனது பெயரை ஜோசப் விஜய் என அறிவித்ததில் பல மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்துள்ள சம்பவத்திற்கு முதலமைச்சர் . ஜோசப் விஜய் மறைமுக உத்தரவு ஏதேனும் அரசு அலுவலகங்களுக்கு பிறப்பித்துள்ளாரா?

என்பது சிதம்பர ரகசியமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இணை ஆசிரியர் .

வாசுதேவன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed