

பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகம், பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளில் சேகரித்து எடுத்து சென்று மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகள் மூலம் தயாரிக்கப்படும் உரத்தை விற்பனை செய்யவேண்டும். இந்த பணியை பேரூராட்சி நிர்வாகம் செய்வதற்கு மாறாக மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்க அரசு ஒதுக்கிய நிதியை பேரூராட்சி தலைவர் திரு.பி.கே.முரளி, செயல் அலுவலர் திருமதி.இந்துமதி சேர்ந்து கொள்ளை யடித்து உள்ளனர். அதற்கு உதாரணமாக பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம் மக்காத குப்பைகளை வாகனங்கள் மூலம் எடுத்து சென்று நல்லூர் ஊராட்சியில் பொப்பிடி கிராமம் சாமியார் கொட்டாய் பகுதியில் தனிநபர் திரு. சின்னசாமியின் பட்டா நிலத்தில் இரவோடு இரவாக சுமார் 200 லோடு களுக்கு மேலாக வாகனத்தில் எடுத்து சென்று கொட்டி உள்ளனர். பேரூராட்சி மூலம் குப்பைகள் சேகரிப்பு செய்து கொண்டு வந்து பேரூராட்சி குப்பை கிடங்கில் கொட்டி மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக தயாரிப்பு செய்து விற்பனை செய்ய வேண்டும். இது எதுவும் நடக்காதது போல் பேரூராட்சி தலைவர் திரு. பி.கே.முரளி செயல் அலுவலர் திருமதி இந்துமதி அவர்கள் செயல்பாடு உள்ளது. மிக பெரிய அளவில் தவறுகள் – ஊழல் முறைகேடுகள் நடந்து உள்ளது. மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை சேகரித்து அதை மக்கும் குப்பை மக்காத குப்பைகள் பிரித்து மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிப்பு செய்து விற்பனை செய்ய வேண்டும். இந்த வேலைகளை பேரூராட்சி நிர்வாகம் எதுவும் செய்யாமல் இதற்காக அரசு ஒதுக்கிய நிதியை கொள்ளையடித்து உள்ளனர். தற்போது பேரூராட்சி நிர்வாகம் தனிநபர் சின்னசாமி என்பவர் நிலத்தில் கொண்டிருப்பதால் இந்த மக்காத குப்பைகள் மூலம் மழைக்காலத்தில் மழைநீர் மூலம் கண்ட போன கழிவுகள் காரணமாக நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும். இதனால் சுற்று வட்டார பகுதிகளில் நல்ல விவசாய பூமியில் காற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் பறந்து விவசாய பூமியில் விழுந்து விவசாய நிலத்தில் ஆடு மாடுகள் மேய்த்து அந்த பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் போது ஆடு மாடுகள் உயிர் இழக்க வாய்ப்பு உள்ளது. விவசாய நிலமும் பாதிக்கும். மண்ணில் மக்காத மருத்துவ கழிவுகள் + பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக மனித உயிர்களுக்கும் – ஆடு மாடுகளின் உயிர் களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
சமூக ஆர்வலர் பாலக்கோடு செய்தியாளர்
சரவணன்
