
ஜூன் 2:
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக மூத்த முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களும், மாண்புமிகு துணை முதலமைச்சரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களும் வழங்கிய வழிகாட்டுதலின்படி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பெ. பழனியப்பன் அவர்கள், பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் முன்னிலையில், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு மேற்கு ஒன்றிய கழகத்தின் மூத்த முன்னோடியான மா. மாது அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார்.அப்போது, கழக வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மூத்த முன்னோடியை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கழகத்தின் சார்பில் ரூ.10,000 மதிப்பிலான பொற்கிழி வழங்கி அவரை பாராட்டினார்.நிகழ்ச்சியில் பேசிய நிர்வாகிகள், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடையே கொண்டு சென்று கழக வளர்ச்சிக்காக உழைத்த மூத்த முன்னோடிகளின் பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது என்றும் தெரிவித்தனர். முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய இயக்கத்தின் வேர்களை வலுப்படுத்திய முன்னோடிகளை கௌரவிப்பது கழகத்தின் கடமையாகும் என்றும் குறிப்பிட்டனர்.இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக மூத்த உறுப்பினர்கள், இளைஞரணி மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்ச்சி கழகத் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஆசிரியர்.
D. ராஜீவ் காந்தி
