Sat. Jun 13th, 2026

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த சட்டவிரோத கல் குவாரிகள் மற்றும் கிரானைட் குவாரிகள் மீது தற்போது கனிமவளத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தின் புதிய கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் விதிமீறி செயல்படும் குவாரிகள் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில், உரிய அனுமதியின்றி செயல்பட்ட 5 கல் குவாரிகள் மற்றும் 2 கிரானைட் குவாரிகள் கண்டறியப்பட்டு உடனடியாக சீல் வைக்கப்பட்டன.இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக விதிகளை மீறி இயங்கி வந்ததாக கூறப்படும் சில குவாரிகள் மீது இதுவரை எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.அதிரடி சோதனையில் அதிகாரிகள்கனிமவளத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் செயல்பட்டது, நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை மீறி கற்கள் வெட்டப்பட்டது, பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படாதது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும், சட்டவிரோதமாக கனிம வளங்களை கடத்த பயன்படுத்தப்பட்ட லாரிகள், ஹிடாச்சி இயந்திரங்கள் மற்றும் பிற வாகனங்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.“சட்டவிரோத செயல்களுக்கு இடமில்லை” – அதிகாரிகள் எச்சரிக்கைஇதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், “அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் எந்த குவாரிக்கும் இனி தளர்வு வழங்கப்படாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மிக முக்கியம். உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும்” என்று எச்சரித்துள்ளனர்.மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் சில குவாரிகள் மீது ரகசிய கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும், அடுத்த கட்டமாக மேலும் பல இடங்களில் சோதனைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.அக்ஷரா பத்திரிக்கை தொடர்ந்து எழுப்பிய கேள்விகள்!கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத குவாரி செயல்பாடுகள் குறித்து அக்ஷரா பத்திரிக்கை தொடர்ந்து பல்வேறு செய்திகளை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மாசுபாடு, வெடிவிபத்து அச்சம், விதிமீறிய கனிம வள கடத்தல் போன்ற பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.பொதுமக்கள் வரவேற்பு“பல ஆண்டுகளாக புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது” என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், “குவாரிகள் காரணமாக கிராமப்புற சாலைகள் சேதமடைந்துள்ளன. வெடி வெடிப்பால் வீடுகள் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற சட்டவிரோத செயல்பாடுகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.அடுத்த கட்ட நடவடிக்கைக்கு எதிர்பார்ப்புசீல் வைக்கப்பட்ட குவாரிகள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த முறைகேடுகளில் அதிகாரிகள் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், சட்டவிரோத கனிம வள கடத்தலில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, தமிழகம் முழுவதும் சட்டவிரோத குவாரி செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு கடும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்.

D. ராஜீவ் காந்தி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *