Sun. Sep 13th, 2026

பாலக்கோடு தாலுக்காவில் ஜமாபந்தி நிறைவு – 33 மனுக்களுக்கு தீர்வு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 16 ம் தேதி தொடங்கியது. பாலக்கோடு, புலிக்கரை, மாரண்டஅள்ளி, வெள்ளிசந்தை ஆகிய 4 பிர்காக்களுக்கு கடந்த நான்கு நாட்கள் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று நிறைவடைந்தது.

இதில் பொதுமக்களிடமிருந்து சமூக பாதுகாப்பு திட்டம், வட்ட வழங்கல் துறை, பட்டா மாற்றம், நில அளவை, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 350மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய விசாரனைக்கு பின் தகுதியுடைய 33 மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் கோவிந்ன் தலைமையில் பயனாளிகளுக்கு அதற்குரிய ஆணையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் அசோக்குமார், துணை தாசில்தார்கள் காமராஜர், ஆறுமுகம், மகேஸ்வரன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள்,நிலஅளவையர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

பாலக்கோடு சிறப்பு செய்தியாளர்.

வேலு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed