
பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு விலைவாசி உயர்வை கண்டித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார்.இதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுபடுத்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை திரும்ப பெறு, அனைவருக்கும் 200 நாள் வேலை வழங்கு என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து, மாவட்ட குழு உறுப்பினர் கலாவதி, வட்ட குழு நிர்வாகிகள் கோவிந்தசாமி, சேகர், வரதராஜன், முருகன், முருகேசன், பாண்டியம்மாள், ராஜா, உதயகுமார் உட்பட கட்சி தொண்டர் திரளாக கலந்து கொண்டனர்.
பாலக்கோடு சிறப்பு செய்தியாளர்
வேலு
