Wed. Jun 17th, 2026

வேலூர்,ஜூன்14-

வேலூர் மாவட்டத்தில், பேரணாம்பட்டில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு குடியாத்தம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலராகவுள்ள சமீம் ரெஹானா கூடுதல் அதிகாரியாக பல வருடங்களாக நீடித்து வருகிறார். ஒரு அரசுத் துறைக்கு அதிகாரிகள் இல்லை என்றால் பக்கத்து ஊரில் உள்ள அதிகாரிகளை கூடுதலாக கவனிக்க சொல்லுவார்கள்.

இப்படி கூடுதலாக கவனிக்கும் அதிகாரிகள் ஒரு ஆறு மாதமும் அல்லது ஒரு வருடமும் கூடுதலாக கவனிப்பார்கள். ஆனால் குடியாத்தம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சமீம் ரெஹானா பல வருடங்களாக பேரணாம்பட்டு வளர்ச்சி திட்ட (கூடுதல் அலுவலராக) அலுவலர் பணியாற்றி வருகிறார். இவர் பத்திரிகையாளர்களை (சமீம் ரெஹானா) தொடர்ந்து அவமதிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் எதை நடத்தினாலும் சமீம் ரெஹானா பத்திரிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது. சமீம் ரெஹானா பேரணாம்பட்டிற்கு சரியாக வருகை தராததால் பேர்ணாம்பட்டு ஜெ.ஜெநகர், கலைஞர் நகர், பத்தல பல்லி எம்.ஜி.ஆர். நகர், சொக்கரிஷிகுப்பம், பல்லலகுப்பம், செண்டத்தூர், மசிகம், சின்னத்தாமல் செருவு போன்ற பகுதிகளில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளில் அங்கன்வாடி ஆசிரியர்கள் சரியாக வேலைக்கு வருவதில்லை என்றும் தெரியவந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பொய்யான கணக்கு வழக்குகளை எழுதி வைத்து தமிழக அரசை ஏமாற்றி வருகின்றனர்.

இதற்கு குழந்தை வளர்ச்சி திட்ட கூடுதல் பொறுப்பு அலுவலர் சமீம் ரெஹானாவும் அலுவலகத்தில் பணிபுரியும் பிரபு ஆகியோர் துணை போவதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் ஒரு சில அங்கன்வாடி ஆசிரியைகள் பொய்யான கணக்கை எழுதி விட்டு பகல் கொள்ளை அடிக்கும் கணக்கில் இருந்து சமீம் ரெஹானாவிற்கும், பிரபுவிற்கும் பங்கு சென்று சேர்வதாகவும் கூறப்படுகிறது .இதற்கு ஒரே தீர்வு சமீம் ரெஹானாவையும், பிரபுவையும்.

வேறு இடத்திற்கு பணியிட மாறுதல் செய்துவிட்டு மேற்கண்ட இரண்டு பதவிகளுக்கும் புதிய அதிகாரிகளை நியமிப்பதே சிறப்பாக இருக்கும் என்று பேரணாம்பட்டு சமூக ஆர்வலர்கள் தரப்பிலும், பெற்றோர்கள் தரப்பிலும் அடித்து கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இணை ஆசிரியர்.

வாசுதேவன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed