Sat. Jun 13th, 2026

தாட்கோ திட்டப் பணிகள் குறித்து சென்னை தலைமை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்வன்னி அரசு அவர்கள் தலைமையில், இன்று (26.05.2026) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) தலைமை அலுவலக கூட்டரங்கில், தாட்கோ மூலமாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றம், வீட்டு வசதி மேம்பாடு, சுயதொழில் வாய்ப்புகள், கல்வி உதவித்தொகைகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் இளைஞர்களுக்கான தொழில் முனைவோர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.மேலும், அரசின் நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு தாமதமின்றி சென்றடைய தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். திட்டப் பணிகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான செயல்பாடு இருக்க வேண்டும் என்றும், மாவட்ட அளவிலான கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.குறிப்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னேற்றத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும், அந்த திட்டங்களின் பயன்கள் நேரடியாக மக்களை சென்றடைய அதிகாரிகள் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் டி. ரவிக்குமார், டாக்டர் ந. சுப்பையன் இ.ஆ.ப., க.சு. கந்தசாமி இ.ஆ.ப., டாக்டர் கி. செந்தில்ராஜ் இ.ஆ.ப., ம. சிந்தனைசெல்வன் உள்ளிட்டோர் மற்றும் துறை சார்ந்த உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தலைமை செய்தியாளர்.

பசுபதி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *