

பொ.மல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சரியான சாலை வசதி இல்லாத காரணத்தினால் உயர் மட்ட மேம்பாலம் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவமனை செல்லும் வகையில் சிறந்த சாலை வசதி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது
பொம்மிடி -வீராச்சியூர் -வேப்பாடி- பூமரத்தூர் – கொளவூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையை அமைத்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்திட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது, இதுவரை இந்த பகுதி மக்களுக்கு எவ்விதமான சாலை போக்குவரத்தும் இல்லை சரக்கு வாகனங்களில் தான் சென்று வர வேண்டிய அவல நிலை உள்ளது சுங்கரஅள்ளி முதல் வத்தல்மலை வரை புதிய சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது காளிக்கரம்பு – தர்மபுரி சாலை உடனடியாக அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் சார்பில்மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்தோஷ்குமார், ரகு ஆகியோர் தலைமை தாங்கினார்கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை மாநிலத் துணைத் தலைவர் ஜெபசிங் மற்றும்குருதிக்கொடைப் பாசறை மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தன் ஆகியோர்கோரிக்கை முழக்கங்களை வைத்தனர், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா, பாதுகாப்புப் படை பாசறை மண்டல செயலாளர் அருண்குமார்மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தருமபுரி விஜய்குண்டல்மடுவு கலையரசன் , சமூக ஆர்வலர் தகடூர் சிலம்பரசன்,பொ மல்லாபுரம் வணிகர் சங்க தலைவர் ஆசாம்கான் ரயில் பயணிகள் சங்க பொருளாளர் முனிரத்தினம் மற்றும்பயணிகள் சங்க பொறுப்பாளர் அருணாச்சலம்ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் ஒட்டுப்பட்டி பகுதி பொதுமக்கள், வேப்பாடி, வீராச்சியூர் , பூமரத்தூர் மற்றும் கொளவூர் பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்.
D. ராஜீவ் காந்தி
