
நியூஸ் சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் செல்போனை பிடுங்கி சோதனை செய்த மர்ம கும்பல்.பெயரளவில் நடவடிக்கை எடுக்கும் காவல்துறை நாமக்கல்: ராசிபுரம் காவல் நிலையத்திற்கு அருகில் பேருந்து நிலையமா? லாட்டரி விற்பனை நிலையமா? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு பட்டப் பகலில் பேருந்து நிலையத்திற்கு உள்ளே கள்ள லாட்டரி அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தடை செய்த அமோக லாட்டரி விற்பனையால் பல கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை பெயரளவில் மட்டுமே அவ்வப்போது வழக்குப் பதிவு செய்து ஓரிரண்டு நாட்களில் நாடகத்தை முடித்து விடுகின்றனர். இதனால் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் ஏழைகள் பலர் தங்களுடைய வாழ்வாதாரம இழந்து கடன் பிரச்சினைகளுக்கு உள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கிறது. என்ன நடக்கிறது ராசிபுரம் பேருந்து நிலையத்தில்?நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையத்தில் சுற்றியுள்ள தேநீர் கடைகளில் துளியும் அச்சமின்றி வேலைக்கு ஆட்கள் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை கண்டும் காணாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இது பற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் அரசியல் தலையீடு, ‘கவனிப்பு’ போன்ற பிரச்னைகளால் பெயரளவில் மட்டுமே அவ்வப்போது வழக்குப்பதிவு, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகவும், அடுத்து ஓரிரண்டு நாட்களில் மீண்டும் வந்து தங்கள் நாடகத்தை தைரியத்தோடு நடத்துவதாகவும் இதனால் ராசிபுரம் சுற்றியுள்ள அன்றாட கூலி வேலைக்கு செல்லும் ஏழைகள் பலர் வாழ்வாதாரம் இழந்து கடன் பிரச்னைகளுக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கிறார் . தடை செய்யப்பட்ட லாட்டரி :-சில ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் லாட்டரி விற்பனையால் பல குடும்பங்கள் கடனில் சிக்கி தற்கொலைக்கு தள்ளப்படும் அவல நிலை உருவானது. நடுத்தர ஏழை மக்களின் வருமானத்தை சுரண்டி பல குடும்பங்களே அழிவுக்கு உள்ளாக்கியதால் 2003-ல் இதனை தமிழ்நாடு அரசு தடை செய்தது. அண்டை மாநிலங்களில் தற்போது வரை விற்பனை தொடரும் சூழலில் இவற்றுக்கான பல மறைமுக விற்பனை கடைகள் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் பேருந்து நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. அரசியல்வாதிகளில் பின்புறம் :அரசியல்வாதிகளின் தலையீடு, மற்றும் செல்வாக்கு, அதிகாரிகளுக்கு ‘கவனிப்பு’ போன்றவற்றால், இவற்றின் மீதான நடவடிக்கை பெயரளவில் மட்டுமே உள்ளதாக புகார் எழுந்துள்ளது. காவல்துறையின் கண்துடைப்பு நாடகம் :அவ்வப்போது காவல்துறை முதியோர், ஆதரவற்றோர், இதற்கென நியமிக்கப்பட்ட சிலரை, கணக்கு காட்டும் வகையில் கைது செய்வது சொற்ப எண்ணிக்கையில் லாட்டரி சீட்டுகளை கைப்பற்றி வழக்கு பதிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடுத்தர, ஏழை கூலித் தொழிலாளர்கள் பலர், பரிசுத்தொகை குறித்த ஆர்வத்தால் தினமும் வருவாயை இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். நாமக்கல் மாவட்ட போலீஸ் நிர்வாகம், இப்பிரச்னையில் அப்பாவி மக்கள் பாதிப்படைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது. ராசிபுரம் பேருந்து நிலையத்தில் அச்சமின்றி லாட்டரி விற்பனை அமோகம் :-தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அரசியல், செல்வாக்கு, கவனிப்பு காரணமாக, கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் விட்டு வைப்பது இல்லை. ஆன்லைன் சூதாட்டத்தை விட மோசமான சூழலில், கடைநிலை மக்களையும் லாட்டரி விற்பனை பாதிப்படைய செய்துள்ளது. நடமாடும் லாட்டரி விற்பனையாளர்கள், விவசாயிகள், கல்லுாரி மாணவர்கள், கிராம மக்கள் ஆகியோரை குறி வைத்து, ராசிபுரம் பேருந்து நிலையத்தில் வெளிப்படையாகவே வேலைக்கு ஆட்களை வைத்து டீக்கடைகள் மற்றும் ஜெராக்ஸ் கடைகளில் அமர்ந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். நம்பர் லாட்டரிகள், கேரள லாட்டரி களுக்கான முடிவுகளை ‘வாட்ஸ் ஆப்’ குழுக்கள் மூலம் அனுப்பி ஆர்வத்தை தூண்டுகின்றனர். ஏழைக் கூலி தொழிலாளர்கள் பலர் தினமும் தங்களது வருவாயை இதில் முழுமையாக இழக்கும் நிலை தொடர்கிறது. பாரபட்சமற்ற நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை மட்டுமே, பல குடும்பங்களை அழிவிலிருந்து பாதுகாக்க உதவ முடியும்., என்றார் சமூக ஆர்வலர் ஒருவர். செய்தியாளரை சோதனை செய்த இளம் லாட்டரி விற்பனையாளர்:- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையத்தில் பட்டப் பகலில் வெளிப்படையாகவே துளி கூட அச்சம் இல்லாமல் டீக்கடைகள் மற்றும் ஜெராக்ஸ் கடைகளில் வேலைக்கு ஆட்களை அமர்த்தி லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த நபர்களிடம் நமது செய்தியாளர்கள் இது என்ன? லாட்டரி எழுதுகிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு நீங்கள் யார்? என்றும் உங்கள் செல்போனை வெளியே எடுங்க. வீடியோ எடுத்தீங்களா? காட்டுங்க பார்ப்போம் என்று செய்தியாளரின் செல்போனை பரிசோதித்து செய்தியாளர்களை வீடியோவும் எடுத்து மிரட்டுகின்றனர் கள்ள லாட்டரி விற்பனை கும்பல். உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு அலைபேசி எண் மூலம் தகவல் தெரிவித்ததன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பார்க்கிறேன் என்று சொன்ன காவலர் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. மௌனம் காப்பதன் மர்மம் தான் என்ன?பேருந்து நிலையத்தில் அதுவும் ராசிபுரம் காவல் நிலையத்திற்கு அருகில் இவ்வளவு வெளிப்படையாக நடக்கிறது என்றால் காவல்துறையின் ஆதரவு இல்லாமல் நடைபெறுமா என்ற சந்தேகமும் வலுக்கிறது. இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மாவட்ட நிர்வாகம் பொறுத்திருந்து பார்ப்போம்? அடுத்த இதழில்…….
சிமா. கைலாஷ்
