Wed. Jul 29th, 2026

பாலக்கோடு அருகே குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் சேரும் சகதியமாக மாறிய ஒகேனக்கல்குடிநீரின் அவலம்- நிர்வாக சீர்கேடு என பொதுமக்கள் ஆதங்கம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பேளாரஹள்ளி ஊராட்சி தம்புடுகொட்டாய், பாரதிநகர், திக்குவாசி கொட்டாய் உள்ளிட்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

பொது மக்களின் குடிநீர் தேவைக்காக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்ட அதன் மூலம் குடிநீர் விநியோகம்செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் தொட்டி மாதம் இரண்டு முறை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க வேண்டும்.

ஆனால் வருடகணக்கில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் குடிநீர் தொட்டிக்குள் மண் கலந்த சேரு பாசை உள்ளிட்டவை இருப்பதால் ஒகேனக்கல் குடிநீர் குடிப்பதால் பல்வேறு நோய் தொற்றுகள் பரவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நிர்வாக சீர்கேட்டால் பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் இதுபோன்ற நிலையில் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

19.6.26 HOGENAKKAL DRINKING WATER PUBLIC ISSUE

பாலக்கோடு சிறப்பு செய்தியாளர்.

வேலு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed