
வேலூரில் சமரச மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிவேலூர் மாவட்டம்,மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு அவர்களின் அறிவுறுத்தலின் படியும், மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி, மாண்புமிகு தலைவர் / வேலூர் முதன்மை மாவட்ட நீதிபதி திரு M இளவரசன் அவர்களின் தலைமையில் 13.6 2026 இன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மோட்டர் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கி வாராகடன் வழக்கு, அசல் வழக்குகள் (பாகப்பிரிவினை வழக்குகள் உள்பட) தொழிலாளர் நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், நில ஆர்ஜித வழக்கு, காசோலை வழக்குகள் மற்றும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துகொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள் ஆகியவை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அதில் 630 வங்கி வாராகடன் வழக்குகள் எடுத்துகொள்ளப்பட்டு, 54 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது, அதற்கான தீர்வு தொகை ரூ.46,17,943/- மேலும் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளில் 2,194 வழக்குகள் பிரிசீலனைக்கு எடுக்கப்பட்டு அதில் மொத்தம் 1,269 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு, அதற்கான தீர்வு தொகை ரூ. 14,35,46,032/-, சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்க தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், 5 நில ஆர்ஜித வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த . 4 தம்பதியர்களை சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர் .
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் கோபி
