Wed. Jun 17th, 2026

வேலூர், ஜூன் 13-

வேலூர் மாவட்டம், காட்பாடி அறுப்புமேடு ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி ( 40). இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

குடும்பப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலில் இருந்த பழனி காலை மது போதையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பழனியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காட்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பழனி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இணை ஆசிரியர்.

வாசுதேவன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed