
தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2வது பெண் – யார் இந்த நீதிபதி மோகனா?தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான வி மோகனா இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார். இவரின் நியமனம் பல்வேறு வழிகளில் முக்கியத்துவம் பெறுகிறது.இவருடன் சேர்த்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைந்த 5 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தது. கோவை அரசு சட்டக் கல்லூரி பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பார்.முக்கிய விவரங்கள்தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வாகும் 2வது பெண் இவர்.சுதந்திர இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் 12வது பெண் இவர்.உயர் நீதிமன்ற நீதிபதியாக அல்லாமல் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வாகும் 11வது நபரும், 2வது பெண்ணும் இவரே.தமிழ்நாட்டில் இருந்து இவருக்கு முன்பாக ஆர் பானுமதி என்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார்.பார் அன்ட் பென்ச் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இவருக்கு முன்னதாக இந்து மல்ஹோத்ரா என்பவர் பெண் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஆசிரியர்
D.ராஜீவ் காந்தி
