Sat. Jun 13th, 2026

தர்மபுரி மாவட்டம் பாலக் கோடு யூனியனில் உள்ள பஞ். ஏரிகளில் மாரண்டஹள்ளி, சின்ன கும்மனுார், பாலக்கோடு, புலி கரை, தண்டுகாரனஹள்ளி, பாறை யூர் உள்ளிட்ட ஏரிகளிலிருந்தும் வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறையின் ஆசியுடன் இரவு, பக லாக டிராக்டர் மற்றும் டிப்பர்களில் முரம்பு மண் கடத்தல் ஜோராக நடந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.இப்போது பஞ்.களில் உள்ள ஏரிகளில் உள்ள முட்புதர்களை அகற்றுதல், கரையை மேம்படுத் துதல் உள்ளிட்ட பணிகளுக்காக நிதி உதவி பெற்று ஏரிகளை சீரமைத்து வருகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில சமூகவிரோதிகள் இரவு நேரங்களில் மணல் மற்றும் முரம்பு மண் உள்ளிட்டவை கடத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.அரசு அனுமதித்த அளவைவிடபாலக்கோடு யூனியனில் ஏரி சீரமைப்பு என்ற பெயரில் இரவு, பகலாக முரம்பு மண், மணல் கடத்தல் நடந்து வருகிறது.அதிக அளவு ஆழத்தில் மண்ணை வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது. மேலும் பஞ். ஏரி களில் இருந்தும் முரம்பு மண் கடத்தும் சமூக விரோதிகளுக்கு பாலக்கோடு வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆசி வழங்கி உள்ளதாகவும், இதனால் கனிம வளங்கள் கொள்ளை போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும் தனிநபர்களின் வருமானத்துக்காக அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகின்றன. பாலக்கோடு யூனியனில் உள்ள பல்வேறு ஏரிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரிகள் மூலம் மண், மணல் அள்ளப்பட்டு வருவது குறித்து விவசாயிகள், பொதுமக்கள் கேள்வி எழுப்பினால், நாங்கள் வருவாய்த்துறையின் அனுமதி பெற்றுதான் மண் அள்ளுகிறோம்என கூறுகின்றனர். சம்மந்தபட்ட அதிகாரிகள் எங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவிக்கும் நிலையில் கனிம வளத்துறை மவுனம் சாதித்து வருகிறது.அதிகாரிகளின் மறைமுக ஆசியால் இரவு, பகலாக மண் கடத்தப்பட்டு வருவது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனால் நீர்மட்டம் பாதிக் கப்பட்டு, கோடை துவங்கும் முன்பே பல்வேறு ஏரிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி விவசா யம் பெரிய அளவில் பாதிக்கும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது..மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய கவனம் செலுத்தி இயற்கை வள கொள்ளையை தடுத்த நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலக்கோடு செய்தியாளர்

சமூக சேவகர் சரவணன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *