Sat. Sep 12th, 2026

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி பேரூர் கழக செயலாளர் பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய துணை செயலாளர் பி.எல்.ரவி, ஒன்றிய அவைத் தலைவர் அமானுல்லா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு உள்ள கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர், அதுசமயம் தொண்டர்கள் கலைஞர் கருணாநிதி வாழ்க, திமுக வாழ்க என கோஷமிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, கிளை செயலாளர்கள் ராஜீ, சரவணன், மியான், ராமமூர்த்தி, ஆறுமுகம் அணிகளின் அமைப்பாளர்கள் ராஜபாட் ரங்கதுரை, மன்சூர், குமரன், வார்டு கவுன்சிலர்கள் மோகன், ஜெயந்திமோகன், சரவணன், ரூஹித், சாதிக், தீபா சரவணன் கழக நிர்வாகிகள் சக்திவேல், தேவன், ஸ்ரீதர் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பாலக்கோடு சிறப்பு செய்தியாளர்.

வேலு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed