Sat. Jun 13th, 2026

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் தனியார் வாகனங்களால் பார்க்கிங் ஏரியாவாக மாறிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் டூவீலர்கள் மற்றும் கார்கள் பேருந்து வளாகத்தில் நிறுத்தப்பட்டு வருகிறது. புறநகர் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து சென்னை, கோவை, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு கடைகள் பேருந்துகளுக்கு இடையில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் என தாறுமாறாக நிறுத்தப்படுவதாலும், பேருந்து நிலையத்தில் காலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியூர் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் இரவு வாகனத்தை எடுத்து செல்வதால் பொதுமக்களுக்கும், பேருந்துகளுக்கும் இடையூறு ஏற்படடு வருகிறது, தாறுமாறாக நிறுத்தப்பட்டு வரும் வாகனங்களால் பேருந்து நிலையம் டூவீலர் ஸ்டாண்ட் ஆக மாறி உள்ளது, இதனால் காலை, மாலை பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கு அதிக அளவில் இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி இடையூறு வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறப்பு செய்தியாளர் பாலக்கோடு

வேலு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *