

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இண்டூர் உள்வட்டத்திற்குட்பட்ட 12 கிராமங்களுக்கான 1435-ஆம் (2025-2026) பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 35 பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, பிறப்பு சான்று, மறுமணம் செய்து கொள்ளவில்லை சான்று உள்ளிட்ட பல்வேறு ஆணைகளை வழங்கினார்கள்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 1435-ஆம் (2025-2026) பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (18.06.2026) நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1435-ஆம் (2025-2026) பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) 16.06.2026 அன்று முதல் தொடங்கி 19.06.2026 வரை வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாயம் மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அன்று 16.06.2026 நல்லம்பள்ளி உள்வட்டத்திற்கும், 17.06.2026 அன்று பாளையம் உள்வட்டத்திற்கும் மற்றும் 18.06.2026 இன்று இண்டூர் உள்வட்டத்திற்கும் ஜமாபந்தி நடைபெற்றது. அதன்படி இன்றைய தினம் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் உள்வட்டத்திற்குட்பட்ட பாலவாடி, மூக்கனஅள்ளி, தளவாய்அள்ளி, சோமேனஅள்ளி, கும்பலபாடி, பங்குநத்தம், கோணங்கிஅள்ளி, எச்சனஅள்ளி, எர்ரபையனஅள்ளி, நெக்குந்தி, நாகர்கூடல், நத்தஅள்ளி ஆகிய 12 வருவாய் கிராமத்திற்கான தீர்வாயம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த வருவாய் தீர்வாயத்தில் இண்டூர் உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், பொதுமக்களிடமிருந்து நிலம் தொடர்பான மனுக்கள், பட்டா மாறுதல் மேல்முறையீடு மனுக்கள், பட்டாவில் பெயர் திருத்தம், பட்டாதாரர் பெயர்களில் எழுத்துப்பிழை, பரப்பு திருத்தம், நிலவுடமை மேம்பாட்டுத்திட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று என மொத்தம் சுமார் 359 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ளன.
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டுமென மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இண்டூர் உள்வட்டத்திற்குட்பட்ட 15 கிராமங்களுக்கான 1435-ஆம் (2025-2026) பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாள் நிகழ்ச்சியில் பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, பிறப்பு சான்று, மறுமணம் செய்து கொள்ளவில்லை சான்று உள்ளிட்ட கோரிக்கை குறித்து விண்ணப்பித்த 35 பயனாளிகளுக்கு பல்வேறு ஆணைகளை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
முன்னதாக, நடைபெற்ற ஜமாபந்தியில் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் பதிவேடுகள், பட்டா சிட்டா பதிவேடு, வரி வசூல் பதிவேடு, நில அளவை பதிவேடு, கிராம கணக்குகள் மற்றும் நில அளவை கருவிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.கவிதா, மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் திரு.செந்தில்குமார், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.பிரசன்ன மூர்த்தி உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஆசிரியர்.
D. ராஜீவ் காந்தி
