Wed. Jul 29th, 2026

பாலக்கோடு சுங்கசாவடியில் 3லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்- டிரைவர் கைது

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக பாலக்கோடு காவல்துறைனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பாலக்கோடு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் சுங்கசாவடி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான வந்த சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 20-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் சுமார் 250கிலோ அளவிற்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. குட்காவுடன்,சுமார் 10-லட்சம்ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த டிரைவர் முத்துராமன்(31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்கோடு சிறப்பு செய்தியாளர்.

வேலு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed