Wed. Jul 29th, 2026

பாலக்கோடு அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடிநீர், விளையாட்டு திடல் இல்லாததால் மாணவர்கள் அவதி- தமிழக அரசு போர்கால அடிப்படையில் நவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் நல்லூர் ஊராட்சி எருதுகூடஹள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுடன் ஈராசிரியர் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. பள்ளியில் குடிநீர் மற்றும் கழிவறைக்கு தண்ணீர் இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாகவே நீண்ட தூரம் சென்று விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தும் அவல நிலையில் தான் இப்பள்ளி உள்ளது.கிராமத்தில் ஒகேனக்கல் குடிநீர் முறையாக வருவதில்லை எனவும் , ஆழ்துளை கிணறும் சில ஆண்டுகளாக பழுதடைந்து காட்சி பொருளாக உள்ளது.மேலும் தாங்கள் வளர்க்கு ஆடு, மாடு, கோழிக்கும் தங்களது அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இன்றி நீண்ட தூரத்திற்க்கு சென்று தண்ணீர் கொண்டு வரும் அவல நிலையில் உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கினறனர். பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் மற்றும் கிராமத்தில் உள்ள படித்த இளைஞர்கள் கிரிக்கெட், கபடி, கூடைபந்து, கைபந்து உள்ளிட்ட மாவட்ட, மாநில அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு, சான்றிதழ்களை பெற்று வந்துள்ளதாகவும் இவர்களுக்கு தேவையான அடிப்படை விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை இல்லாத நிலை உள்ளது. இளைஞர் இன்று பல்வேறு போதை கலாச்சாரத்தில் ஈடுபட்டு வரும்நிலையில் எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டி வருவது அனைவருக்கும் எடுத்துகாட்டாக உள்ளது.தண்ணீர் பற்றாக்குறை குறித்து ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தால் ஊராட்சியில் போதிய நிதி இல்லை என்று அலட்சியமாக பதில் கூறுவதாக தெரிவிக்கினறனர்.எனவே தமிழக அரசு எங்கள் பள்ளிக்கு தேவையான தண்ணீர், விளையாட்டு திடல் உள்ளிட்டவை உடனடியாக வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed