Sat. Jun 13th, 2026

ஜூன் 9-

வேலூர் மாவட்டம் என்றாலே தமிழகத்தில் போலி செய்தியாளர்கள் நிறைந்த மாவட்டமாகும். திருப்பூரை அடுத்து வேலூர் மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது செய்தியாளர் என்ற போர்வையில் அந்த பெயரை பயன்படுத்தி காட்பாடி, விருதம்பட்டு, பிரம்மபுரம், திருவலம், பொன்னை ஆகிய காவல் நிலையங்களில் உள்ள நிலைய எழுத்தர் முதல் காவல் ஆய்வாளர் வரை அனைவரையும் மிரட்டி முதல் தகவல் அறிக்கையை மாற்றுவது, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்காக பரிந்துரை செய்வது என்று தகாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் ஒருவர். அவருக்கு துணையாக 2 செய்தியாளர்கள் என்ற போர்வையில் போலி செய்தியாளர்கள் காரில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். எங்கு சென்றாலும் வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களது பெயரை எஃப்.ஐ.ஆரில் இருந்து நீக்குவது, சிலரின் பெயரை சேர்ப்பது என்று இவர்களது விருப்பம் போல் ஒரு கும்பல் செயல்பட்டு பணம் பார்த்து வருகிறது. இதற்கு தலைமையாக ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்ற திரைப்படத்தின் கதை ஆசிரியரின் பெயரை கொண்ட ஒரு நபர் இதற்கு கேங் லீடராக செயல்பட்டு வருகிறாராம். இவருக்கு ஒரு போலி செய்தியாளர் கும்பல் கூஜா தூக்கிக் கொண்டு இவரது பின்னால் சுற்றித் திரிகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. கொலை வழக்கில் கூட குற்றவாளிகள் பெயரை நீக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி காவல் நிலையத்திலேயே அமர்ந்து இந்த கும்பல் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இது தனி பிரிவு போலீசாருக்கு நன்கு தெரிந்திருந்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று மேற்சொன்ன காவல் நிலையங்களில் எந்த தகவல் என்றாலும் இவர்களை கேட்காமல் நடைபெறாது என்ற வண்ணம் இவர்கள் மாற்றி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலைக்கு காவல் நிலையத்தை மாற்றி விட்டது இந்த கும்பல் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இதுபோன்ற அதிர்ச்சி தகவல்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் காதுகளுக்கு எட்டியதா? இல்லையா? என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. தனிப்பிரிவு போலீசார் நன்கு குறட்டை விட்டு தூங்குகின்றனர். காரணம் இவர்களும் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர் என்பது அதிர்ச்சிகரமான தகவலாகும். இப்படி காவல் நிலையங்களை ஆட்டிப்படைக்கும் கும்பலை காவல் நிலையத்திற்குள் சேர்க்காமல் இருப்பதற்கு உண்டான வழி வகைகளை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், குறிப்பாக வடக்கு மண்டல ஐஜி மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். எந்த வழக்காக இருந்தாலும் உள்ளே சென்றால் இவர்கள்தான் என்ன என்று விசாரித்து வரும் நபரிடம் பணம் பறிப்பது ஒரு சிறு தொகையை நிலைய எழுத்தரிடம் கொடுத்து விட்டு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து கொடுத்துவிட்டு பெரிய தொகையை தங்களது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வெளியேறுவதை தொடர்ந்து வழக்கமாக கொண்டுள்ளது இந்த கும்பல் என்று சொன்னால் அதுதான் உண்மையிலும் உண்மையாகும். ஆக மொத்தத்தில் குற்றவாளிகளை தப்பிக்க விடுவது, திருட்டு வாகனங்களை எடுத்துக் கொள்வது, விற்பனை செய்வது இப்படி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் ஒவ்வொன்றாக கூறப்படுகிறது. மாலை 6 மணி ஆனதும் அதே காவல் நிலையத்தில் உள்ள நிலைய எழுத் தரையோ அல்லது உதவி ஆய்வாளர்கள் யாரையாவது குறி வைத்து மது பாட்டில்களையும் அவர்களிடமே பெற்றுச் செல்வது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . இதுகுறித்து யாராவது தட்டி கேட்டால் இங்கு எல்லாம் நாங்கள் தான், எங்களை மீறி எதுவும் நடக்காது என்று மார்தட்டி கொள்கின்றனர் கொக்கரிக்கின்றனர் இந்த செய்தியாளர்கள் என்ற மாஃபியா கும்பல். இவர்களுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை காவல் நிலையத்திற்குள் வராதவாறு நடவடிக்கை எடுக்குமா? அல்லது காப்பு கட்டுமா? அல்லது இவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமா?.இதில் எந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக மேற்கொள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் தனிப்பிரிவு போலீசாரை கூண்டோடு இடமாற்றம் செய்துவிட்டு புதிய நபர்களை பணிக்கு அமர்த்தினால் மட்டுமே இதுபோன்ற அவலங்கள் நடைபெறாமல் தடுக்கலாம் என்று சமூக ஆர்வலர்களும், இவர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் கதை கதையாக கூறுகின்றனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா? அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுவாரா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

இணை ஆசிரியர்.

வாசுதேவன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *