Sat. Jun 13th, 2026

பாலக்கோடு மேக்கலாம்பட்டி ஏரிகரையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டாக்டர் கலாம் பசுமை நல அமைப்பின் சார்பில் மரக்கன்று நடும் விழா தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மேக்கலாம்பட்டி ஏரிகரையில் டாக்டர் கலாம் பசுமை நல அமைப்பின் சார்பில், தலைவர் முருகன் தலைமையில் மரக்கன்று நடும் விழா நடந்தது,அறக்கட்டளை நிர்வாகிகள் சீனிவாசன், மாதன், இளங்கோவன், ஜெயராமன், ஆறுமுகம், கெளதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜீன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு நாளாக ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுபுற சூழலை பாதுகாக்கவும், புவி வெப்பமாதலை தடுக்கவும் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதில் பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேக்கலாம்பட்டி ஏரிகரை பகுதியில் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசும் போது சமூக அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் முயன்ற அளவு தாங்கள் வசிக்கும் பகுதியில் மரங்களை வளர்த்து இயற்கையை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.அதனை தொடர்ந்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.நிகழ்ச்சியில் வனத்துறை அலுவலர் அன்பு பாலக்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்

பாலக்கோடு சிறப்பு செய்தியாளர்

வேலு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *