
பாலக்கோடு தீயணைப்பு நிலையத்தில்தீ தடுப்பு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் – திரளானோர் பங்கேற்புதர்மபுரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா அவர்களின் உத்தரவின்படி பாலக்கோடு தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் வாங்க கற்றுக் கொள்வோம் என்ற 2 நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நிலைய அலுவலர் திருத்தணி முருகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு மின்சார தீ விபத்து, காஸ் தீ விபத்து, பட்டாசு தீ விபத்து, வாகன தீ விபத்து மற்றும் தீயணைப்பான் கருவிகளின் வகைகள், தீயணைப்பான்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் தளவாடங்கள், செயற்கருவிகள் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்களுக்கு நேரடியாக விலக்கப்பட்டது.பயிற்சி முகாமில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பாலக்கோடு சிறப்பு செய்தியாளர்.
வேலு
