Sat. Jun 13th, 2026

ஜி. ரஜேஷ் அவர்கள், திமுக வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகி, புதிய அரசியல் எழுச்சியாக தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சியில் இணைந்தார்.இந்த இணைப்பு நிகழ்ச்சி சென்னை நகரில் நடைபெற்றது. நிகழ்வில் ஆனந்த் அவர்கள் முன்னிலையில், மூத்த வழக்கறிஞரான ஜி.ரஜேஷ் அவர்களுக்கு கட்சி உறுப்பினர் சேர்க்கை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் முக்கிய இடம்பிடித்துள்ள ஜி.ரஜேஷ் அவர்கள் பல்வேறு பொதுநல மற்றும் சமூக பிரச்சினைகளில் சட்ட ரீதியாக செயல்பட்டு வந்தவர் என கூறப்படுகிறது. திமுக வழக்கறிஞர் அணியில் இருந்து செயல்பட்டு வந்த அவர், தற்போது புதிய அரசியல் பயணமாக தவெக-வில் இணைந்திருப்பது அரசியல் மற்றும் வழக்கறிஞர் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள், ஜி.ரஜேஷ் அவர்களின் வருகை கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என கருத்து தெரிவித்தனர். மேலும், இளைஞர்கள் மற்றும் சட்டத்துறை சார்ந்த நபர்கள் அதிக அளவில் தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்து வருவது கட்சியின் வளர்ச்சியை காட்டுவதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில், பயர் குமரேசன் ராவ் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், “சீனியர் வழக்கறிஞர் ஜி.ரஜேஷ் அவர்களை அன்புடன் வரவேற்று மகிழ்கின்றோம். அவருடைய அரசியல் மற்றும் சமூக அனுபவம் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பலமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.இந்த இணைப்பு நிகழ்வு, வரவிருக்கும் அரசியல் சூழலில் தவெக கட்சியின் வளர்ச்சிக்கும், புதிய ஆதரவாளர்கள் வருகைக்கும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

பத்திரிகை வழக்கறிஞர்

குமரேசன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *