
திரு ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ஒரு பேட்டியில் எனது 40 வருட கால நண்பர் மு க ஸ்டாலின் அவர்களை இக்கட்டான சூழ்நிலையில் ஆறுதலுக்காக சந்தித்தேன் எனவும் வேறு எந்த ஒரு அரசியல் உள்நோக்கமும் இல்லையென கூறி இருந்தார் ஆனால் 40 ஆண்டுகால நண்பரை இக்கட்டான சூழ்நிலையில் சந்தித்தேன் என கூறும் திரு ரஜினிகாந்த் அவர்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவருக்காக நற்பணி மன்றம் வைத்து மக்களுக்கு பல நல்ல பொதுச் சேவைகளை செய்து வந்த ரசிகர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போறார் என சிவகங்கை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் அமைப்பாளர் மானாமதுரை ரவி கேள்வி எழுப்பி உள்ளார் திரு ரஜினிகாந்த் அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் அவரது திரைப்படத்தை 50 பைசா ஒரு ரூபாய் ஒண்ணா ரூபாய் என்ற கட்டணத்தில் அன்றைய காலகட்டத்தில் தியேட்டர்களில் கீ வரிசையில் நின்றிருந்து படத்தைப் பார்த்து ரசித்து வந்த எண்ணற்ற ரசிகர்களில் பலர் இன்று ஏழ்மை நிலையில் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்கள் அவர்கள் அக்கால முதல் இன்று வரை எந்த அரசியல் கட்சியிலும் சாராமல் திரு ரஜினிகாந்த் அவர்களுக்காக நற்பணிகளை மட்டுமே மக்களுக்கு இன்று வரை செய்து வருகிறார்கள் அவர்களை பார்த்து பல கட்சியை சேர்ந்தவர்கள் கேலிச்சித்திரமாக பார்க்கிறார்கள் ஆகையால் ரஜினிகாந்த் அவர்கள் அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் என வேண்டுகிறேன் மேலும் அவரது ஆரம்பகால ரசிகர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது தங்களது குடும்பத்துடன் தலைவர் ரஜினிகாந்த் உடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டுமென ஆசையோடு கனவுகளோடு இன்று வரை காத்துஇருக்கிறார்கள்இன்று வரை அதற்கான வழி தெரியவில்லை ரஜினிகாந்த் அவர்களுக்காகஇன்று வரை உழைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு திரு ரஜினிகாந்த் அவர்கள் ஏதாவது ஒரு வழியில் உதவி செய்து அவர்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கு ஏற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்




சிவகங்கை மாவட்ட செய்தியாளர். ரவி
