
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில்மகாகவி பாரதியார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சமூக ஆர்வலர் சரவணன் தலைமையில் மரக்கன்று நடும் விழா நடந்தது,தலைவர் கணேசன், துணை தலைவர் அம்மாசி, துணை செயலாளர் லோகநாதன், அக்ரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜீன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு நாளாக ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுபுற சூழலை பாதுகாக்கவும், புவி வெப்பமாதலை தடுக்கவும் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதில் பாலக்கோடு டி.எஸ்.பி. ராஜசுந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பூங்கா பகுதியில் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசும் போது சமூக அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் முயன்ற அளவு தாங்கள் வசிக்கும் பகுதியில் மரங்களை வளர்த்து இயற்கையை பாது காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.அதனை தொடர்ந்து சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள்:- சீனிவாசன், மாதன், இளங்கோவன், ஜெயராமன், ஆறுமுகம், கெளதமன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு செய்தியாளர் & சமூக சேவகர்.
சரவணன்
