Sat. Jun 13th, 2026

இன்றைய செய்திகள்27.05.2026(புதன்கிழமை)🌹தரங்கெட்ட எண்ணமும் தரமில்லா சிந்தனையும் உடைய மனிதர்கள் பார்வையில் தரமானவன் எது செய்தாலும் அது தவறாகவே தெரியும்.!🌹🌹தேவை மட்டும் இல்லையென்றால்…மனிதர்கள் ஒருவருக்கொருவர்பேசவே யோசிப்பார்கள்.!!🌹🌹🌹எல்லா தவறுக்கும் மன்னிப்பு உண்டு.ஆனால், என்ன செய்தாலும் மன்னிப்பு கிடைக்காத ஒரே தவறு துரோகம் ஆகும்.!!!அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪭🪭தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு 👉வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு என தெரிவிப்பு.🪭🪭2025 – 2026 -ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டத்தை முதன்மை பெற்ற மாவட்டமாக சாதனை படைத்திட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஆற்றல்மிகு மாநில பொதுச் செயலாளர் திரு. மன்றம் நா. சண்முகநாதன் அவர்கள் தலைமையில் மாநில, மாவட்ட ,ஒன்றிய பொறுப்பாளர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.🪭🪭நேற்று 26.05.2026 செவ்வாய்கிழமை காலை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோ சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்தனர்.🪭🪭ஜாக்டோ ஜியோ சார்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் அவர்களை நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஜாக்டோ ஜியோ தலைவர்களை சந்திக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர் முதலமைச்சர் அவர்களை சந்தித்த பிறகு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் முனைவர் மாயவன் அவர்கள் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.🪭🪭மத்திய அரசு திட்டம், முதல்முறையாக அண்ணாமலை எதிர்ப்புநடப்பாண்டில் இருந்தே 9ஆம் வகுப்புக்கு மூன்றாவது மொழி கட்டாயம் என்பதை ஏற்க முடியாதுபுதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்ப பெற வேண்டும் CBSE-ன் இந்த திடீர் அறிவிப்பால் தமிழக மாணவர்களின் பெற்றோருக்கு பேரதிர்ச்சி மிக குறுகிய காலத்திற்குள் 9ம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியை கற்க முடியாதுமுன்பறிவித்தபடி 3 ஆண்டுகளுக்கு பிறகு, 2029-30 ஆம் கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும்என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து🪭🪭மே 28ம் தேதி நடக்க இருந்த கியூட் யூஜி தேர்வு ஒத்திவைப்பு.பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து மே 28ம் தேதி நடக்க இருந்த கியூட் யூஜி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டிற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு கியூட் யூஜி தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ஒத்திவைத்துள்ளது.புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்; தேர்வர்கள் அவ்வப்போது அதிகாரப்பூர்வ இணைய தளங்களை பார்வையிட்டு புதிய தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும்.ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் என்டிஏ உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்🪭🪭விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கைமணல், ஜல்லி போன்ற பொருட்களை விற்பனைக்காக ஏற்றிச் செல்லும் வாகனங்கள், விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென உத்தரவுவாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கான மணல், ஜல்லிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும், உரிய ரசீது இல்லையென்றால் கட்டாயம் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் அமைச்சர் பிரபு அதிரடி ஆணை🪭🪭சிஎன்ஜி (CNG) வாகன எரிவாயுவின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.சிஎன்ஜி எரிவாயுவின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது.இதுவரை ரூ.91.50-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சிஎன்ஜி, தற்போது ரூ.93.50 ஆக உயர்வு🪭🪭விரைவில் அறிமுகம் ஆகும் எத்தனால் அடுப்புகள்: அமைச்சர் நிதின் கட்கரிஎல்பிஜி-யை விடக் குறைந்த செலவில் எத்தனால் மூலம் இயங்கக்கூடிய ஒரு புதிய அடுப்பு சந்தைக்கு வரவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்.எத்தனால் அடுப்பு எல்பிஜி போன்றே எரியும். இது மண்ணெண்ணெய் மற்றும் கேஸ் சிலிண்டர்களை விடப் பாதுகாப்பானது.🪭🪭பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்-எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்🪭🪭தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840க்கு விற்பனை.தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,730க்கு விற்பனை.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295க்கு விற்பனை.🪭🪭அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்தார்.ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதிக்கொண்டு வந்ததால் சபாநாயகர் ஏற்பு.திங்கட்கிழமை 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நிலையில்,நேற்று ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா. இதனால் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பலம் 43 ஆக குறைந்துள்ளது.🪭🪭தமிழ்நாட்டில் கட்டவுட் வைச்சே CM ஆகிடலாம்நான் இங்கு பல ஆண்டுகளாக இருக்கிறேன் ஆனால் என்னால் சிஎம் ஆக முடியவில்லை. தமிழ்நாட்டை நெனச்ச பொறாமையா இருக்கு ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண்.🪭🪭தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? – பட்டியலை கொடுத்த மத்திய தேர்வாணையம்தமிழகத்தின் அடுத்த டிஜிபியை விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு🪭🪭சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் இசக்கி சுப்பையா🪭🪭அதிமுகவை சீண்டிப்பார்க்க வேண்டாம் என தவெகவுக்கு அதிமுக ஐடி விங் பதில்”🪭🪭தமிழக அரசு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்.! மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்.. கர்நாடகா பிடிவாதம்🪭🪭தவெக அரசின் அறிவிப்பு விவசாயிகள் சுமையை குறைக்காது: இந்திய கம்யூனிஸ்ட்🪭🪭தேர்தல் வாக்குறுதி படி கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்🪭🪭தெற்கு இரானில் அமெரிக்கா திடீர் தாக்குதல்; என்ன நடக்கிறது?தெற்கு இரானில் உள்ள இரானிய ஏவுகணைத் தளங்களையும், கண்ணிவெடிகளைப் பதிப்பதற்கு முயன்ற படகுகளையும் குறிவைத்து, அமெரிக்க ராணுவம் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.🪭🪭அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதை ஏற்க முடியாது: திருமாவளவன் பேட்டி🪭🪭வாக்குறுதி அளித்தபடி, 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு சகல கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: முதலமைச்சர்க்கு இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் கடிதம்🪭🪭தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 9.91 டி.எம்.சி. நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவுஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி. நீரை திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு🪭🪭தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு, மத்திய அமைச்சர் அறிவிப்புநாகை – திருவாரூர் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஆயிரத்து 427 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிக்கைமுக்கியத்துவம் வாய்ந்த இந்த இணைப்பு திட்டத்தால், திருச்சி, கோவை மற்றும் துறைமுக நகரங்களான காரைக்கால் மற்றும் நாகை இடையே இணைப்பு ஏற்படுத்தப்படுவதுடன், அப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகள் வலுப்பெறும் என எதிர்பார்ப்பு🪭🪭உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பில் தைவான் முதன்முறையாக இந்தியாவை பின்னுக்குத் தள்ளி, உலகின் 5-வது மிகப்பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது.தற்போது தைவானின் மொத்த சந்தை தைவான் $4.95 டிரில்லியன் மதிப்புடன் 5-வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்தியா $4.92 டிரில்லியன் சந்தை மதிப்புடன் 6-வது இடத்திற்கு இறங்கியுள்ளது🪭🪭அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல – சிபிஎம் விமர்சனம்🪭🪭டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை அவசியம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் வாரியத்தின் டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை அவசியம்.நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைனிலேயே நடைபெறும்.கட்டிட அனுமதிக்கான விண்ணப்பக் கட்டணம், முன்வைப்புத் தொகை, பாதுகாப்பு தொகை உள்ளிட்ட அனைத்தும் இணையதளம் மூலமே சமர்பிக்கப்பட வேண்டும் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🌹🌹”முதுமையை நேசியுங்கள்…!”👉முதுமை வந்து விட்டதே!, என வருந்த வேண்டாம். முதுமைப் பருவம் தவிர்க்க முடியாது. இளமையைப் போல முதுமையையும் நேசிக்கப் பழக வேண்டும்..👉முதுமையும் ஓர் அழகு. நமது ஒத்துப் போகும் குணம், மனதை இளமையுடன் வைத்துக் கொள்ளப் பழகுவது ஆகியவை முதுமையைக் கடக்க எளிதான வழிகளாகும்…👉முதுமையில் ஏற்படும் களைப்பை, நோய்களை, உடல் வலிகளை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.👉உடல்நிலை எதற்குத் தகுதியோ அதை மட்டும் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது.👉பேரக்குழந்தைகளுடன் மகிழ்வுடன் இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் குறும்புகளை அனுபவிக்க வேண்டும். ஆனால்!, முழு நேரக் காப்பாளராக இருக்கக் கூடாது..மகள் அல்லது  மகன் பொறுப்பில் அவர்கள் வளர்க்கட்டும், அவர்களிடம் அந்தப் பொறுப்பை விட்டுவிட வேண்டும்.👉மக்கள் கூட்டம், அக்கம்பக்கத்தார் , நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர்கள் கூட்டத்தை அதிகரித்து அவர்களுடன் மகிழ்வுடன் இணைந்து இருக்க வேண்டும்.👉தன்னை ஒரு சுமையாக கருதிக் கொண்டு, தன்னை மற்றவர்கள் சுமையாகக் கருதும் அளவிற்கு பேசிக்கொண்டும், நாளது சிக்கல்களில் தாமும் போய் விழுந்து, அதிக சிக்கல்களாக மாறிக் கொண்டும் இருந்தால், உறுதியாக அமைதியே கிடைக்காது..👉ஆம்!, அன்பு மூத்த குடிமக்களே…!முதுமை வரும் பொழுது மனதைத் தான் பக்குவப்படுத்தி மகிழ்ச்சி பெறத் தெரிய வேண்டும். அதுதான் இளமையாக இருப்பதின் மறைபொருளாகும்…!👉இவ்வளவு நாள் சேமித்ததை நல்ல முறையில் செலவிடுங்கள். உங்கள் உடல் நிலை, பொருளாதார வசதி ஒத்துழைத்தால் இதுவரை சென்று வர இயலாத இடங்களுக்கு குடும்பத்துடன்  சென்று வாருங்கள்…!!👉கடந்த கால நினைவுகளை எண்ணாமல் நிகழ்காலத்திற்கு வாருங்கள். நேற்றைய நினைவுகளோ, நாளைய கவலைகளோ தேவையற்றவை. நேற்று என்பது முடிந்து போனது. நாளை என்பது வராமலேயே கூடப் போகலாம். உங்களையும் மற்றவர்களையும் மன்னித்து விடுங்கள்…!!👉உங்களால் பிறருக்கு ஏதேனும் இடர் ஏற்பட்டிருந்தால் தயங்காமல் மன்னிப்பு கோருங்கள். குடியொன்றும் முழுகிப் போவது இல்லை. இறுதியாக வாழ்வின் சுழற்சியில் மரணமும் ஒன்று. அமைதியோடு அஞ்சாமல் இருங்கள்…!!!👉இந்த வாழ்வை விடச் சிறந்த வாழ்வின் திறவுகோல் தான் மரணம். செல்வதற்கு எப்போதும் தயாராக இருங்கள். முதுமையை வென்று இளமையாக வாழ்வோம்…!!!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *