Sat. Jun 13th, 2026

மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். குறிப்பாக புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கும், மக்களுக்கும் தட்டணுக்கள் தானமும் இரத்த தானமும் அவசர தேவையாக தமிழக முழுவதும் வழங்கி வருகின்றனர். புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு தலைமுடி செய்ய கூந்தல் தானம் விழிப்புணர்வை தருமபுரி மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தருமபுரி ராயல் நகர் பகுதியை சேர்ந்த விமலேஷ் அவர்களது மனைவி சுஜித்ரா மற்றும் அவரது சகோதரி அன்விதா கூந்தல் தானம் வழங்கினார்கள். அன்விதா அவர்கள் அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் சண்முகம், கணேஷ், தன்னார்வலர் குணசீலன் ஆகியோர் கூந்தல் தானத்தை பெற்று கொண்டனர். இவர்களது குடும்பத்தினருக்கும் மை தருமபுரி அமைப்பின் சார்பாக மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்

சிறப்பு செய்தியாளர் பாலக்கோடு

வேலு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *